இறந்த இரண்டு குழந்தைகளுக்காக மனமுடைந்து பேசிய முகேன் ராவ்..

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் வெற்றிப்பெற்றவர் தான் முகேன் ராவ். இவர் பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பே பல ஆல்பம் பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

மலேசியா மக்களின் மனதில் முகேன்ராவ் என்றால் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் பிக்பாஸ் வீட்டிலும் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். அப்படி ஒரு பாடிய பாடல் தான் ’சத்தியமா நான் சொல்லுறேன் டி’ பாடல். இளைஞர்கள் மட்டுமின்றி சிறியவர்களையும் இந்த பாடல் ஹிட் அடித்தது.

இந்நிலையில் முகேன் ராவ் இணைய பக்கத்தில் ஒரு சோகமான பதிவு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு துயரமான சம்பவம் நடந்துள்ளது. ஒன்று சுஜித் இறந்த விஷயமும், மலேசியாவை சேர்ந்த Mohd Firdaus என்ற சிறுவன் 5 வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது 8 வயதில் இறந்துள்ள சம்பவமும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறுவனுக்கு முகேன் பாடிய பாடல் என்றால் விருப்பம், படுக்கையிலும் அவர் பாடிய பாடலை தான் பாடிக்கொண்டிருந்தாராம்.

மேலும், முகேனை காண வேண்டும் என்பதே ஆசையாக இருந்துள்ளது. ஆனால் இந்த தகவல் முகேனுக்கு தாமதமாக சென்றால் வரமுடியாமல் போனது. இதனால் முகேன் ராவ் வருத்ததுடன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.