தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை கீதாஞ்சலி இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.
கர்நாடகாவை சொந்த ஊராக கொண்ட கீதாஞ்சலி மறைந்த என்.டி. ராமராவ் இயக்கிய சீதாராம கல்யாணம் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
அதன் பின்னர் சுமார் 60 ஆண்டுகளாக தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மிக அதிகமாக நடித்த கீதாஞ்சலி, இந்தி, மலையாள படங்களையும் விட்டுவைக்கவில்லை.
இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று உடல்நலம் மோசமடைந்த நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இவருக்கு தன்னுடன் நடித்த ராமகிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆதித்ஸ்ரீனிவாஸ் என்ற மகனும் உள்ளார்.