பஸ்ஸில் ஆண்களின் கவனத்தை ஈர்த்த வசனம்! பெண்கள் கோபம்! கடுப்பான நடிகை..!!

தமிழ் சினிமாவின் முக்கியமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. பிரபல இசையமைப்பாளருடன் பணியாற்றி பல ஹிட் பாடல்களை பாடியுள்ளனர்.

அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் குறையவில்லை. அண்மையில் பெண்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். டிவிட்டரில் இது குறித்த பதிவுகள் அடிக்கடி இடம் பெறுவது வழக்கம்.

இந்நிலையில் கோவையில் பேருந்து ஒன்றில் “பார்ப்பது கண்ணின் குற்றமல்ல, பார்க்க வைப்பது பெண்ணின் குற்றம்” என வசனம் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்த புகைப்படத்தை பதவிட்டுள்ள அவர் பெண்களுக்கான தகவல். எப்படியான பெண்வெறுப்பு இருந்தால் இப்படி பெண்களை கேவலப்படுத்தும் விதமாக கோஷங்கள் எழுத வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.