கிரிக்கெட்லிருந்து ஓய்வை அறிவித்த வீரர்.!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட்லிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே எதிராக டி20 போட்டியில் விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல், திடீரென அந்த தொடரிலிருந்து விலகி உள்ளார். கிரிக்கெட்டிலிருந்து  ஓய்வு பெறுவதற்க்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளியிடப்படவில்லை இதனால் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், க்ளென் மேக்ஸ்வெல் ஓய்வு குறித்து ஆஸ்திரேலிய அணியில் உளவியல் ஆலோசகர் மைக்கேல் லாயிட் கூறியதாவது, மேக்ஸ்வெல் சில மனநலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வந்தார். இதனால் தான் அவர்  தற்காலிக ஓய்வை அறிவித்துள்ளார்.

மேலும், தனது மன ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சில சிக்கல்களைச் சந்தித்து வரும் க்ளென் மேக்ஸ்வெல் இதனால் காரணமாக தான் கிரிக்கெட்லிருந்து சில காலம் ஓய்வெடுக்க விரும்புகிறார். அவருக்கு எந்த மாதிரியான சிக்கல்கள் உள்ளது என்பதை  கண்டறிந்து அதனை சரிசெய்யும் முயற்சிகளில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லின் இந்த திடீர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என சமூகவலைதளங்களில் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.