லட்சக்கணக்கில் மோசடி.. நடிகைக்கு மூன்றாண்டு சிறை

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை சரிதா நாயருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

காற்றாலை மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோவையில் கற்றாலை அமைத்து தருவதாக கூறி 26 லட்சம் ருபாய் மோசடி செய்துள்ளார் அவர். இந்த வழக்கில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி என்ற மூவர் மீது வழக்கு நடந்துவந்தது.

வழக்கின் தீர்ப்பு இன்று வழக்கங்கப்பட்டது. அதில் நடிகர் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் செலுத்த தவறினால் அவருக்கு மேலும் 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.