ஈன இரக்கம் இன்றி கட்டிய மனைவியை கொலை செய்து மண்ணெண்ணெய்யை ஊற்றி கொளுத்திய கணவன்..!! இந்தியாவில் அரங்கேறிய கொடூரம்…!!!

மகளின் இறப்பு விபத்து என்று நினைத்துக் கொண்டிருந்த தாத்தாவிற்கு தனது 7 வயது சிறுமி கூறிய உண்மை அதிர்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவருடைய மனைவி ரேணுகா. யோகிஸ்ரீ(7), தன்யாஸ்ரீ(1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பமாக குஜராத்தில் ராணுவ குடிமனையில் வாழ்ந்து வருகின்றனர்.

ரேணுகாவின் தந்தை ஏழுமலைக்கு கடந்த 27ம் திகதி ராணுவ அலுவலகத்திலிருந்து, தங்களது மகள் ரேணுகா சிலிண்டர் வெடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போன் வந்துள்ளது.

தந்தை வந்த மகளின் எரிந்த சடலத்தினைப் பார்த்து வேதனையடைந்து அழுதுள்ளார். பின்பு இறுதிக்காரியங்கள் நடந்து கொண்டிருக்கையில், குழந்தை யோகிஸ்ரீ “அப்பாதான் அம்மா மேல மண்ணெண்ணெய்யை ஊற்றி கொளுத்திட்டார்” என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட அதிர்ச்சியடைந்த ஏழுமலை, கலெக்டர் மற்றும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில், நாகேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாகவும், அந்த உறவைக் கண்டித்ததாலேயும் தான் ரேணுகாவை கணவன் தீ வைத்து கொளுத்தியதாக தெரியவந்துள்ளது.