சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இந் நிலையில், முதல் சுற்று பேச்சுகள் தொடர்பான உடன்படிக்கயை கையெழுத்திட புதிய இடம் முடிவு செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிலியில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாடு நடைபெறுவதால் அதன் பின்னர் இடம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
சிலியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் புதிய இடத்தைத் தேர்வு செய்ய சீனாவுடன் அமெரிக்கா ஆலோசித்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.