இரவில் கண்டிப்பாக பழங்கள் உண்ண வேண்டும்..!!

நம்மில் அதிகமானவர்கள் இரவு நேரத்தில் எதையாவது இனிப்பாக உண்ணுவதற்கு ஏங்குவார்கள்.இவ்வாறானவர்கள் அதிகமானவர்கள் விரும்புவது பழங்களைத்தான்.அதேபோன்று உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் இரவு நேரத்தில் ஏனைய இனிப்பு பண்டங்களுக்கு பதிலாக பழங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அத்துடன் பழங்கள் ஆரோக்கியமானவை, சாறுத்தன்மை கொண்டவை, ஊட்டச்சத்துக்கள் அடங்கியவை அத்துடன் இயற்கையான இனிப்புத்தன்மை கொண்டவை.இதனால் ஏனைய இனிப்பு பண்டங்களை விடவும் சிறந்தவையாக இருக்கின்றன.எனினும் இரவு நேரங்களில் பழங்களை உள்ளெடுக்கும்போது சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.ஆயுள்வேதத்தில் இரவு உணவிற்கு பின்னர் பழங்களை உள்ளெடுக்கும் முன்னர் சிறிய கால இடைவெளியை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பழங்கால மருத்துவ முறைகளில் தூக்கத்திற்கு செல்வதற்கு 3 தொடக்கம் 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் பழங்களை உண்ண வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பிரதான காரணமாக காணப்படுகின்றமை இவை சமிபாடு அடைவதற்கான கால அவகாசத்தை வழங்கவேண்டியமையாகும்.எவ்வாறெனினும் இரவு நேரங்களில் ஒரு கோப்பை நிறைய பழங்களை உண்ணக் கூடாது. அத்துடன் துண்டு துண்டாக்கப்பட்ட பழங்களையே உண்ண வேண்டும்.இது சமிபாடடைவதற்கு இலகுவானதாக இருக்கும்.

அத்துடன் குறைந்த இனிப்பு தன்மையுள்ளதும் அதிக நார்த்தன்மை உள்ளதுமான பழங்களை இரவு நேரங்களில் உண்பதற்காக தேர்வு செய்வது சிறந்ததாகும்.உதாரணமாக மெலன், பியர் (Pear) மற்றும் கிவி பழங்களை குறிப்பிடலாம்.மேலும் பழங்களை சாப்பிட்ட பின்னர் உடனடியாக தூக்கத்திற்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.