வெங்காய பக்கோடா செய்வது எப்படி ??

முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவை சேர்க்க வேண்டும்.

ஒரு ஸ்பூன் எண்ணெயை சுட வைத்து அதனுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்து அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், ஒட்டாமல் கலவையை எடுத்து போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். இப்போது சுவையான வெங்காய பக்கோடா தயார்.