நீங்கள் நவம்பர் மாதம் பிறந்தவரா..!!!

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் அவர்களுக்குள் பல வகையிலான குணங்கள் காணப்படும்.அந்தவகையில் நவம்பர் மாதம் பிறந்தவர்கள் மற்றவர்களை விட எப்பொழுதும் வித்தியாசமானவர்களாகவும், தனித்துவமானவர்களாகவும் இருப்பார்கள்.அந்தவகையில் தற்போது நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் சில அற்புத குணங்கள்.

தனிமையான நேரத்தை விரும்புவார்கள்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தனிமையை விரும்புபவர்கள், தங்களின் ரகசியங்களை எப்பொழுதும் இவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.அதனால்தான் இவர்கள் இந்த தந்திரமான உலகத்திலிருந்து தங்கள் உண்மையான சுயத்தை பாதுகாக்க தனிமையான நேரத்தை மட்டுமே விரும்புகிறார்கள்.இவர்கள் மற்றவர்களுடன் நன்றாக பழகுவார்கள், ஆனால் அவர்களுக்கென சில விதிமுறைகள் இருக்கும். அவர்களின் தனிமையான நேரத்தில் கூட அவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள்.

இவர்களை புரிந்து கொள்வது மிகவும் கடினம்

இவர்களின் தனிமையை விரும்பும் இயல்பால் இவர்கள் எப்பொழுதும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.மனதளவில் இவர்கள் மென்மையானவர்கள் மற்றும் இனிமையானவர்கள், இவர்கள் ஒருபோதும் மற்றவர்களை தெரிந்தே காயப்படுத்த மாட்டார்கள்.இவர்கள் செய்யாத குற்றத்துக்காக பெரும்பாலும் பழியை சுமக்க நேரிடும்.இவர்களின் மூளை மற்றவர்களை விட வித்தியாசமாக செயல்படும்

இவர்கள் மிகவும் ஆக்கபூர்வமானவர்கள். எந்தவொரு விஷயத்திலும் புதுமையை கையாளுவது இவர்களின் பழக்கமாகும்.இவர்களை போன்ற ஒருவரை நீங்கள் எப்பொழுதும் பார்க்க முடியாது, இவர்கள் அவ்வளவு தனித்துவம் வாய்ந்தவர்கள்.வாழ்க்கையின் மீதான இவர்களின் அணுகுமுறை எப்பொழுதும் வித்தியாசமானதாக இருக்கும்.இவர்களின் செயல்கள் இருக்கும் வித்தியாசமும், தனித்துவமும் இவர்களை எப்பொழுதும் கூடுதல் சிறப்பானவராக காட்டும்.

நேர்மையான நண்பர்கள்

இந்த மாதத்தில் பிறந்தவர்களிடம் நேர்மையும், விசுவாசமும் நிறைந்திருக்கும். இவர்கள் தங்களின் விசுவாசத்தை மற்றவர்களுக்கு காட்டும்போது அதனை முழுமையாக வழங்குவார்கள்.

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் நண்பர்களை ஏமாற்றுவதை நீங்கள் பார்க்க முடியாது. தங்கள் நண்பர்களை பாதுகாக்க இவர்கள் எதையும் செய்வார்கள்.இந்த குணத்தாலேயே இவர்கள் அனைவராலும் விரும்பப்படுவார்கள்.அநீதியை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கோ அல்லது தங்கள் நண்பர்களுக்கோ அநீதி நடக்கும்போது மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார்கள்.சரி எது தவறு எது என்று வரும்போது இவர்கள் கடினமான முறைகளை கையாளுகிறார்கள், எப்பொழுதும் தங்கள் மனது சொல்வதையே கேட்பார்கள்.இவர்களை சுற்றி தவறு நடந்தால் அதனை எதிர்த்து குரல் கொடுப்பார்கள். கருத்து வேறுபாட்டைக் காட்ட அவர்கள் பயப்படுவதில்லை, அதனால்தான் அவர்கள் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

ஈர்ப்பு மிக்கவர்கள்

தோற்றத்தால் மட்டுமல்ல குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் திறன் கொண்டவர்கள் இவர்கள். இவர்களிடம் இருக்கும் எந்த குணம் மற்றவர்களை ஈர்க்கிறது என்பது மிகவும் புதிரானது.இவர்களைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் இவர்களின் புகழ் மற்றும் இவர்கள் கொண்டிருக்கும் அற்புதமான குணங்கள் காரணமாக இவர்கள் மீது பொறாமைக்கொள்வார்கள்.

விடாமுயற்சி உள்ளவர்கள்

இவர்கள் ஒரு விஷயத்தை செய்ய தொடங்கும் முன் அதனைப்பற்றிய ஆழமான புரிதலோடுதான் தொடங்குவார்கள். சிறந்த உழைப்பாளியாக இருக்கும் இவர்கள் தாங்கள் எடுத்த வேலையில் சிறந்த முடிவுகளை கொண்டு வருவார்கள். இவர்கள் தங்கள் வேலையில் நூறு சதவீதத்தை கொடுக்காத நபர்களுடன் சமரசம் செய்ய மாட்டார்கள்.

உணர்ச்சிவசப்படுதல்

இது நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் மிகப்பெரிய பலவீனமாகும். ஒரு சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியாத போதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் சூழ்நிலை இல்லாதபோதோ இவர்கள் தங்கள் நிதானத்தை இழந்து விடுவார்கள்.அதிக உணர்ச்சிவசப்படும் போது இவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள், இதனை மற்றவர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். உணர்ச்சிவசப்படும்போது இவர்கள் எளிதில் தோல்வியை சந்திக்கிறார்கள்.

எளிதில் தூண்டப்படக்கூடியவர்கள்

வழக்கமாக நவம்பரில் பிறந்தவர்கள் சண்டைகள் மற்றும் வாதங்களிலிருந்து விலகி இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.ஆனால் மற்றவர்களால் தூண்டப்படும் போது இவர்கள் சண்டைகளில் தீவிரமாக இறங்குவார்கள், இதில் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவெனில் இவர்கள் தூண்டப்படக்கூடியவர்கள்.இவர்களின் கோபம் அனைவரும் தவிர்க்க விரும்பும் ஒன்றாகும். ஏனெனில் கோபத்தில் இருக்கும்போது இவர்கள் சகஜ நிலைக்கு திரும்புவது கடினமாகும்.

பிடிவாதம்

அவர்கள் எதையாவது தீர்மானித்தவுடன், அவர்களை அவர்களின் பாதையிலிருந்து திசை திருப்புவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.உண்மையில், அவர்கள் எப்போதும் தங்கக்குள்ளேயே ஒரு பெரிய போட்டியைக் கொண்டுள்ளனர்.அவர்கள் எவ்வளவு விமர்சிக்கப்பட்டாலும், இந்த வலிமையான எண்ணம் கொண்ட இவர்கள் தாங்கள் அடைய விரும்புவதை அடைவார்கள்.இந்த பிடிவாதத்தால் இவர்கள் சில உறவுகளை இழக்க நேரிடும், அதனை பற்றி இவர்கள் கவலையே படமாட்டார்கள்.