5 வயது சிறுமியை கொலை செய்து புதைத்த குடும்பம்.!

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளமேடு கிராமத்தை சார்ந்தவர் உத்தண்டி (வயது 35). இவரது மனைவியின் பெயர் இராஜேஸ்வரி (வயது 32). இவர்கள் இருவருக்கும் அம்சவல்லி என்ற ஏழு வயதுடைய மகளும்., மீனா என்ற 5 வயதுடைய மகளும்., கனகவள்ளி என்ற 3 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மேலக்குப்பம் சாலை பகுதியில் இராஜமாணிக்கம் என்பவரின் மனைவி (வயது 59) என்பவரின் இல்லத்தில் தங்கியிருந்து விவசாய பணிகளுக்கு சென்றும்., கோழிப்பண்ணையில் பணியாற்றியும் வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு  வருடங்களாக கொத்தடிமை போல பணியாற்றி வந்துள்ளனர்.

மேலும்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இராஜேஸ்வரியின் மகள் மீனா மாயமாகிய நிலையில்., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., சிறுமி கொலை செய்யப்பட்டு அங்குள்ள முதனை முந்திரி தோப்பில் பிணமாக புதைக்கப்பட்டதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தன்னை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கமலம் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறவே., காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சிறுமி மீனாவை கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து மேற்கொண்ட விசாரணையில்., நான் – எனது மகள் அஞ்சலை (வயது 34) – மகள் அருள்முருகன் மற்றும் உறவினர் ஐயப்பன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டதை அடுத்து., சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து., இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும்., இந்த விசாரணையில் மூவரை கைது செய்துள்ள காவல் துறையினர்., தலைமறைவாக உள்ள அருள்முருகனை தேடி வருகின்றனர்.

காவல் துறையினரின் விசாரணையில்., எனது வீட்டில் பணியாற்றி வந்த உத்தண்டி மற்றும் அவரது மனைவி இராஜேஸ்வரி ஆகியோர் பணியாற்றி வந்த நிலையில்., எனது வீட்டின் மொட்டை மாடியில் நிலக்கடலை பருப்பை காயவைத்திருந்தேன். இதனை இராஜேஸ்வரியின் மகளான மீனா இதனை சேதப்படுத்தியதால்., ஆத்திரமடைந்து அவரை பிடித்து சுவரின் மீது மோதவைத்து அடித்தேன். இதனால் சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டு., இரத்தம் வழிந்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தாள்.

இதனையடுத்து அதிர்ச்சிக்கு உள்ளான நான் மீனாவின் பெற்றோருக்கு எதுவும் கூறாமல்., எனது மகன் அருள்முருகனிடம் விஷயத்தை கூறி., எனது மகள் அஞ்சலை மற்றும் உறவினர் ஐயப்பனின் உதவியோடு மீனாவின் உடலை முந்திரி தோப்பிற்கு கொண்டு சென்று புதைத்துவிட்டு வீடு திரும்பினோம். தற்போது காவல் துறையினரின் விசாரணையில் நாங்கள் அனைவரும் மாட்டிக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு., அங்குள்ள கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.