ரயில் வரும் போது தண்டவாளத்தில் விழுந்த பெண்.!வீடியோ.!

ரயில் நிலையத்தில் போனில் பேசியபடி சென்ற பெண் பயணி ரயில், ரயில் நிலையத்தில் நெருங்கி வரும் சமயத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று ரயில் நிலையத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது, அப்போது ரயில் வருவதை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரிக்கையும் செய்தனர். ஆனால் இதை கவனிக்காத பெண் ஒருவர், செல்போனில் பேசிய படியே எதையும் கவனிக்காமல் ரயில் வரும் தண்டாவளத்தில் விழுந்துவிடுகிறார்.

இதையடுத்து, ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் தண்டாவளத்தில் விழுந்த அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். ஆனால் மெட்ரோ ரயில் வந்து கொண்டிருந்ததால் அந்த ரயில் நிறுத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது.