அந்த காலத்தில் சித்தர்கள் கண்டறிந்த ஒன்று தான் ஆட்டுப்பால். அதாவது தாய்ப்பாலுக்கு மாற்றாக ஆட்டுப்பாலை பயன்படுத்தலாம் என்பது தான்.
அந்த காலத்துல சொன்னது இப்ப எல்லாம் சரியா வராது என்று நினைக்கிறீர்களா? அது தான் தவறு…
சில காலங்களுக்கு முன்பு வரை இதனை தவறு என்று கூறியவர்கள், இன்று இதனை ஒத்துக்கொள்ளும் நிலைமைக்கு வந்துள்ளார்கள்.
அந்த அளவிற்கு ஆட்டுப்பால் பற்றிய தகவல்கள் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
ஆட்டுப்பாலில் பல மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஆட்டுப்பாலில் காணப்படும் பீட்டாகேசின் என்ற புரத அமைப்பு தாய்ப்பாலை ஒத்து காணப்படுகிறது.
இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு மிகச் சரியான மாற்று இந்த ஆட்டுப்பால் தான்.
இளம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மலச்சிக்கல் போன்ற நோய்கள் ஆட்டுப்பால் கொடுப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
தாய்ப்பாலில் தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தும் உயிர்வேதிப் பொருட்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதே வேதி பொருட்கள் ஆட்டுப்பாலிலும் காணப்படுகின்றன.
ஆட்டுப்பாலிலும் கொழுப்புகள் காணப்படுகின்றன. ஆனால் அந்த கொழுப்புகள் மாட்டுப்பாலை விட மிருதுவான தன்மை கொண்டவை. அதனால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகி விடும்.
அதேபோல் மாட்டுபால், தயிர் போன்ற பொருட்கள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். ஆனால் ஆட்டுப்பாலில் லாக்டோஸ் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் இதனை அனைவரும் தாராளமாக உண்ணலாம். இது எந்த உடல் பிரச்சனைகளையும் ஏற்படுத்துவது இல்லை.
ஆட்டுப்பாலில் அதிகளவு இரும்புச்சத்து காணப்படுகிறது. எனவே இதனை குழந்தைகளுக்கு அளிப்பதால் அவர்களுக்கு போதுமான அளவிற்கு இரும்புச்சத்து கிடைத்து விடுகிறது.
இதில் மாட்டுபாலை விட செலினியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் இதை அருந்தும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆட்டுப்பாலில் உள்ள நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கின்றன.
மேலும் ஆட்டுப்பாலில் உள்ள ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகின்றன.
மேலும் ஆட்டுப்பால் அருந்தும் குழந்தைகள் நன்கு தூங்குவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
அதனால் இனிமேல் ஆட்டுப்பாலை கிடைத்தால் அருந்தாமல் விட்டுவிடாதீர்கள்….!!