தற்போதுள்ள பெரும்பாலான நாடுகளில் இணையத்தொழில் நுட்பமானது 4 ஜி சேவையை பெற்று வருகிறது. இந்த 4 ஜிக்கு அடுத்தபடியாக உள்ள 5 ஜி சேவையினை அளிப்பதற்கு சீனா., அமெரிக்கா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில்., 5 ஜி சேவையானது 4 ஜி சேவையை விட சுமார் 20 மடங்கு முதல் 100 மடங்கு வரை அதிவேகத்துடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும்., கடந்த ஏப்ரல் மாதத்தின் போது தென்கொரிய அலைபேசி நிறுவனமான சாம்சங் 5 ஜி அலைபேசியை வெளியிட்ட நிலையில்., அமெரிக்காவும் தனது 5 ஜி சேவையை அடுத்தடுத்த சில வாரத்திற்குள்ளாகவே அறிமுகம் செய்திருந்தது.
இந்த தருணத்தில்., இணையத்தின் அதிவேகத்தை அறிமுகம் செய்ய சீனாவும் விரும்பி., இதற்காக சீனா மொபைல்ஸ் மற்றும் சீனா டெலிகாம்., சீன யூனிகாம் ஆகிய நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனாவில் உள்ள பீஜிங்., ஹாங்காய்., வூகான் என மொத்தமாக சுமார் 50 நகரங்களில் 5 ஜி சேவையானது துவங்கப்பட்ட நிலையில்., இதனை உலகம் முழுவதிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும்., 5 ஜி சேவையினை இந்தியாவிற்குள் துவக்க அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கிடையே போட்டியும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில்., சீன நாட்டில் சீனாவே அறிமுகம் செய்துள்ள நிலையில்., 5 ஜி சேவைக்கு மாத கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ.1272 பெற முடிவு செய்துள்ளதாகவும்., அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் செலுத்தும் நபருக்கு நொடிக்கு ஒரு ஜி.பி வேகத்தில் 300 ஜி.பி டேட்டாவை பெற இயலும் என்றும் தெரிவித்துள்ளது.