இந்தியா – வங்காள தேச அணிகளுக்கு இடையே டி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த டி20 கிரிக்கெட் போட்டி இந்தியா – வங்காள தேச அணிகளுக்கு இடையேயான 9-வது ஆட்டமாகும். இதுவரை நடந்து முடித்துள்ள 8 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளன.
கடந்த மார்ச் மாதம் கொழும்பில் நடைபெற்ற டி20 போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில இந்தியா வெற்றி பெற்றதது. இதில் இந்திய அணி அதிக பட்சமாக 180 ரன் குவித்தது. அந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 166 ரன் எடுத்திருந்தது.
இந்தியா – வங்காள தேச இடையேயான ரோகித்சர்மா 8 ஆட்டத்தில் 356 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். இதில் நான்குஅரை சதம் அடங்கும். 236 ரன்கள் குவித்து தவான் இரண்டாம் இடத்திலவங்காளதேச வீரர்களில் சபீர் ரகுமான் 6 ஆட்டத்தில் 236 ரன்களும், முஷ்பிகுர் ரகீம் 165 ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்த போட்டிகளில் வங்காளதேச வீரர்கள் ரூபல் உசேன், அல்அமின் 7 விக்கெட்டும், அஸ்வின் 6 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.