தனியறையில் அடைத்து வைத்து கொடுமை..! மனைவியுடன் உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள முருகன் மற்ரும் அவரது மனவி ஆகியோர் வேலூரில் தனிதனியாக சிறைவைக்கபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தன்னை தனியறையில்வைத்து கொடுமைப்படுத்துவதாக முருகன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்திய போது ஒரு ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டு, ஹெட்செட் என்பவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டதோடு, முருகனுக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு தனி அறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முருகன் சாப்பிட மறுத்து வருகிறார்.

முருகனை தனி அறையில் அடைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது மனைவி நளினியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

நேற்று 6-வது நாளாக அவர் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்த நிலையில், செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, வழக்கு விசாரணையை 13-ம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், சிறை வளாகத்திற்குள் அதிகாரிகள், காவலர்களை மீறி மூச்சுவிட கூட முடியாது அப்படி இருக்கும்போது செல்போனை எப்படிப் பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நானும், எனது மனைவி நளினியும், லண்டனில் உள்ள மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வருகின்றோம் என்று கூறிய அவர், 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தி வருகின்ற நிலையில் அதனை தடுக்க சிறைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு சதிசெய்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் அவர்கள் தன்னை தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள் என்க்கூறிய அவர், எங்களுடைய விடுதலையையும் பரோலையும் தடுக்கவே இவ்வளவு சதி அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அவர் பொலிஸ் காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.