பிக்பாஸில் எனக்கு இத்தனை பெரிய துரோகம் நடந்தது, மீரா மிதுன்..!!

மீரா மிதுன் மாடலாக இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர். இவர் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும், இந்நிலையில் இவர் நடிக்கவிருந்த படங்கள் அனைத்திலும் இவரை நீக்கினார்கள்.

நடித்த படங்களில் கூட இவரின் காட்சிகளை டெலிட் செய்தார்கள், சமீபத்தில் வந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கூட அது தான் நடந்தது.

தற்போது இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு தனக்கு இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை என பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.