கொழும்பு, தெஹிவளை கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தில் 100 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட நட்பின் அடிப்படையிலான சந்திப்பும் விருந்துபசாரமும் போதைப்பொருட் பரிமாறலும் இடம்பெற்ற வேளை பெண்கள் உட்பட சுமார் 100 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 வயது முதல் 48 வயதுக்கு உட்பட்ட இவர்களில் 17 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தெஹிவளை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இதுபோன்ற அநாச்சாரங்களை ஏற்படுத்தி வரும் டிக்டாக் சந்திப்புகளும் அதிகரித்து வருவதால் அது தொடர்பிலும் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.