ரஜினி கட்சி ஆரம்பிக்க தயக்கம் காட்டுவது, பாமகவின் மீதுள்ள பயத்திலா அல்லது வேறு காரணங்களா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், அரசியலுக்கு வரப் போவதாகவும் 23 ஆண்டுகளாக கூறி வருகின்றார்.
ரசிகர்களை கூட்டி ஊரறிய அறிவித்தும் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது. படங்களில் கமிட் ஆகி வரும் ரஜினி அரசியல் நடவடிக்கைகளில் எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் தான் இருக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி அரசியலுக்கு வந்தால் பவர் ஸ்டார் ஆகி விடுவோமோ என்ற அச்சம் தான் என ரஜினி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், பாபா படத்தின் பொழுது பாமகவுடன் நடந்த பழைய பிளாஷ்பேக்குகளை நினைத்து பார்ப்பதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலரே வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் ரஜினி ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மேல் வர்க்கத்தை சீண்டும் விதமாகவே அமைந்திருக்கின்றது.
இதனால், ரஜினிக்கு தலித்திய வாக்குகள் கிடைக்கும் என்பதில் அச்சமில்லை. இருப்பினும் ரஜினி சாதி அடிப்படையிலான கூட்டணி தொடங்குவது சந்தேகம் தான். அப்படி தலித் சாதி அரசியலை ரஜினி கையில் எடுத்தால் பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை பகைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பது ரஜினிக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் ஆகும்.
செலவுகளை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களை சார்ந்து இருப்பதாக ஒரு தோற்றம் உருவாகி வருகின்றது. மற்றபடி வாக்கு வங்கிகள் என கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி ஏதும் இல்லை. எனவே, அவர்களுடனான பேச்சுவார்த்தை பணத்திற்காக தான் இருக்கும் என்றும், மக்களை நம்பாமல் ரஜினி அரசியல் கட்சிகளை நம்பினால் அவருக்கு பூஜ்ஜியம் தான் மிஞ்சும் என்றும், கூறப்படுகிறது.
ரஜினிக்கு பக்கபலமாக சில மன்ற தலைவர்கள் இருந்த போதிலும், அவர்களை நம்பி அரசியலில் இறங்கினால் ரஜினிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். எனவே, ரஜினியை கரைசேர்க்கும் கப்பல் அதிமுக-பாஜக கூட்டணி தான். இதில் பாமக இடம்பெற்றிருப்பதை நினைத்து ரஜினி அச்சம் கொண்டு தனி கட்சி துவங்கினால் இறுதியில் சிவாஜியின் நிலைமைதான் ரஜினிக்கும் ஏற்படும்.’ என அரசியல் விமர்சகர்கள் உறுதியாக கூறுகின்றனர்.