தேவையான பொருட்கள் :
கம்பு – 1 கப்
புழுங்கள் அரிசி – 1கப்
உளுந்து – ஒன்றை கப்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
கம்பு, அரிசி இரண்டையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். உளுந்து வெந்தயம் சேர்த்து தனியாக ஊற விடவும். ஊறிய பின் சுத்தம் செய்து உளுந்து வெந்தயம் நன்றாக இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும்.
பிறகு அரிசி, கம்பு, நைஸாக தோசை மாவு போல் அரைத்து உப்பும், உளுந்துமாவும் சேர்த்து கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு தோசை வார்த்தால் நன்றாக பட்டு போல் தோசை வார்க்க வரும்.
இதற்கு எந்த சட்னி வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.