தேவைப்படும் பொருட்கள் :
மரவள்ளிக்கிழங்கு துருவல் – 3 கப்
தோசை மாவு – ஒரு கப்
தேங்காய் துருவல் – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 8
பெருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்யும் முறை :
தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக்கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, மிதமான சு+ட்டில் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாக வேகவைத்து.