தேவைப்படும் பொருட்கள் :
பால் – கால் லிட்டர்
கசகசா – 2 ஸ்பூன்
ஏலக்காய் – 2
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை :
முதலில் பாலை மிகவும் குறைந்த தீயில் காய்ச்ச வேண்டும்.
இதன் இடையில் கசாகசாவை ஒரு கடாயில் போட்டு வறுத்து எடுத்து சிறிது பால் சேர்த்து நன்றாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
அரைத்து வைத்துள்ள கசாகசாவை பாலுடன் சேர்த்து மேலும் 10 நிமிடம் குறைந்த தீயில் காய்ச்சவும்.
கடைசியில் ஏலக்காயை தட்டி போட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும். மிகவும் அருமையாக இருக்கும்.