உலகத்தின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக இருப்பது தாஜ்மஹால். இது முகலாய மன்னனான ஷாஜகானால்., தனது அன்பு மனைவியின் நினைவாக எழுப்பப்பட்டது. இந்த தாஜ்மகால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் இருக்கும் யமுனை நதிக்கரையின் மீது அமைந்துள்ளது.
இந்த அதிசயத்தை காணுவதற்கு உலகளவில் இருந்து மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமான ஒன்றுதான். இந்த தருணத்தில்., சுமார் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பொன்று தாஜ்மஹால் வாகன நிறுத்தத்தில் ஊர்ந்து மெல்ல மெல்ல சென்றுள்ளது.
இந்த பாம்பை முதலில் கவனிக்காத மக்கள் இயல்பாக இருக்கவே., கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த நபர்கள் பாம்பை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனையடுத்து கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த செய்தியானது காவல் துறையினருக்கு தெரிவதற்குள் தாஜ்மகாலுக்கு வந்திருந்த மக்களிடையே தீயாய் பரவியதை அடுத்து., சுற்றுலா பயணிகள் அனைவரும் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். மேலும்., அதிகளவு பாம்புகள் வந்திருக்கலாம் என்றும் வதந்தி தொடர்ந்து பரவியது.
இந்த வதந்தியை அறிந்த மக்கள் செய்வதறியாது நான்கு பக்கமும் சிதறி ஓடவே., தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை பத்திரமாக மீட்டனர். பாம்பிற்கு பரிசோதனை மேற்கொண்ட பின்னர்., வனப்பகுதிக்குள் பாம்பை கொண்டு விட்டனர்.