30 ஆண்டுகளாக மணப்பெண் உடையணிந்த ஆண்..! அதிர வைக்கும் காரணம் ??

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜான்பூரைச் சேர்ந்த சிந்தாஹரன் சவுகான் என்பவர் தினசரி கூலித் தொழிலாளியான பணியாற்றி வருகின்றார். தன்னுடைய குடும்பத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் மரணங்களை தடுக்க கிட்ட தட்ட 30 ஆண்டுகளாக மணப்பெண் போல உடை அணிந்து உலா வந்து இருக்கின்றார் இவர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த சிந்தாஹரன் சவுகான் என்பவர் தன்னுடைய மூத்த மனைவி மற்றும் இரண்டாவது மனைவி ஆகிய இருவரின் இறப்பிற்கு பிறகும் தன்னுடைய குடும்பத்தில் தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. அத்துடன் சிந்தாஹரன் சவுகான்க்கும் உடல் நிலை மிகவும் மோசமாகி இருக்கின்றது.

இப்படிப்பட்ட நிலையில், சவுகானின் இரண்டாவது மனைவி அவருடைய கனவில் தோன்றி தன்னுடைய திருமண உடையை அணிந்து கொண்டால் இந்த வீட்டில் எந்த பிரச்னையும் இருக்காது என்று கூறியதாக சவுகான் தெரிவிக்கின்றார்.

எனவே, சவுகான் 1989ம் ஆண்டிலிருந்து மணப்பெண் உடையையும், பெரிய மூக்கு வளையம் மற்றும் வளையல்களையும் அணிந்து வருகின்றார். அன்றிலிருந்து தன்னுடைய வாழ்க்கை சுமுகமாக செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.