புதிய ஸ்டைலில் அசத்தும் விஜய்..!

லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார்.  தளபதி 64 என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்த படம் கல்லூரி கதைக்களத்தை கொண்டதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்தது. இதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் டெல்லியில் ஆரம்பிக்கிறது. இதற்காக டெல்லி சென்றிருக்கிறது படக்குழு.

இந்த நிலையில், விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் செல்லும் விஜய்யின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. டெல்லியில் 40 நாட்கள் நடைபெற உள்ள படப்பிடிப்பில் விஜய் சேதுபதியும் பங்கேற்று உள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், சாந்தனு, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும், விஜய் புதிதாக வைத்திருக்கும் இந்த மீசையை அவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.