மும்பை பைகுலா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஏற்கனவே திருமணமான இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்த விஷயம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், அந்த இளம்பெண்ணோ சற்றும் அதனை பொருட்படுத்தாமல் அந்த திருமணமான ஆணை காதலித்து வந்துள்ளார்.
சமீபத்தில் இவ்விரு குடும்பங்களும், நவராத்திரி பூஜையில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது, தாண்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் நடனமாடியுள்ளனர். அப்பொழுது இவ்விரு ஜோடிகளும் இணைந்து ஆட இரு குடும்பத்தாருக்கும், இது மோதலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த பெண்ணின் தங்கை இளைஞனை அடித்து அவமானத்திற்குள்ளாக்கியுள்ளார். இதன் காரணமாக அவமானப்படுத்திய பெண்ணை பழி வாங்க திட்டம் தீட்டிய இளைஞன், தங்கையின் நிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்பினால் தான் உன்னை திருமணம் செய்வேன் என தன்னுடைய காதலிக்கு மிரட்டல் விடுத்துள்ளான்.
அந்த காதலியும் அதனை ஏற்று தங்கைக்கு குளிக்கும் போது போட்டோக்கள் எடுத்து அனுப்ப, அதனை அந்த கொடூரன் இணையத்தில் வைரலாக்கினான். இது அந்த பெண்ணின் உறவினருக்கு தெரிய வர விஷயம் அம்பலமாகியுள்ளது. எனவே, காவல் துறையினரின் விசாரணையில், அக்காதான் தங்கையின் நிர்வாண புகைப்படத்தை அனுப்பினார் என்பதை தெரிந்து கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.