தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் கருவாடு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 3
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும்.
கருவாடை சின்னதாக நறுக்கி நன்கு கழுவி எடுத்து வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கி, அதனுடன் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து வதக்க வேண்டும்.
ன்கு வதங்கி மசாலா வாசனை போனவுடன் தக்காளி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் கழுவி வைத்துள்ள கருவாடு போட்டு வதக்கி 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வெந்து கிரேவி கெட்டியானவுடன் இறக்க வேண்டும்.
இதை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.