பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் பிரபலம் ஆனவர் தான் வாணி போஜன். இதன்பின் சில தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டு தன்னை பிரபல படுத்தி கொண்டார் வாணி.
தற்போது, வெள்ளி திரையில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார். நடிகர் வைபவுக்கு ஹீரோயினாகவும், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன்பின், தெலுங்கிலும் நடிகர் விஜய் தேவர்கொண்ட தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் வாணி.
இந்நிலையில் சின்ன திரையில் இருக்கும் போது அடக்க ஒடுக்கமாக குடும்ப பெண்ணாக இருந்த வாணி. வெள்ளித்திரைக்கு சென்ற உடன் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் அண்மையில் இவர் கலந்து கொண்ட விழாக்களில் இவர் அணிந்திருந்த கவர்ச்சியான உடையை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் என்னடா நம்ம வாணியா இது என்று அதிர்ச்சியோடு இணையத்தளங்களில், அந்த புகைப்படங்களை வைரலாகி வருகின்றனர்.