பல பெண்களை மிகவும் ஆபாசமாக படம் எடுத்து, சித்தரித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது.
இந்நிலையில், பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முகமது என்ற முதுகலை பட்டதாரி ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் பெண்களையே ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது
சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிடும் செயலை பார்த்த பெண் ஒருவர் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் முகம்மதை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முகமது, “பெண்களின் உடல் மீது மோகம் அதிகம் கொண்டிருப்பதால் ஆபாச படங்கள் அடிக்கடி பார்ப்பேன். எனவே அதேபோல பேருந்துகள் ரயில்களில் செல்லும் பெண்களின் புகைப்படங்களை நானே எடுத்து, அவற்றை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் உலாவ விடுவேன்.” என்று தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தொடர்ந்து, “ஒருகட்டத்தில் பெண்களின் மீதான ஈர்ப்பு அதிகமாகவே, எனது குடும்பத்தில் இருக்கும் பெண்களையே ஆபாசமாக படம் எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.” என பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.