விஜயின் நெஞ்சினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் ‘இஷா கோப்பிகர்’. இதற்கு பிறகு தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தார். மேலும், கல்யாணத்திற்கு பிறகும் இவர் நடிப்பது நிறுத்தவில்லை. ஆனால் குழந்தை பெற்றெடுத்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதை குறைத்து கொண்டு, சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார். இதன்பின், தற்போது இஷா கோப்பிகர் மறுபடியும் முழு நேர நடிகையாக கலத்தில் இறங்கியுள்ளார்.
இதைதொடர்ந்து சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை பற்றியும் இஷா கோப்பிகர் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். தனது வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி மனம் திறந்து பேசியுள்ளார். அது என்னவென்றால் பல நேரம் எனக்கு கதாபாத்திரத்தின் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், யாராவது ஒருவர் போன் செய்து அவர்களது மகள் அல்லது உறவினர்களுக்கு வாய்ப்புகளை வாங்கி விடுவார்கள்.
இதையடுத்து ஒரு நாள் தயாரிப்பாளர் ஒருவர் எனக்கு போன் செய்து நான் ஒரு படம் எடுக்கிறேன். அதில் நீங்கள் தான் கதாநாயகி இந்த நடிகர் தான் ஹீரோ என்று சொன்னார். இதற்காக அந்த நடிகரிடன் என்னை போன் செய்து பேச சொன்னார்.மேலும், நான் அந்த நடிகருக்கு போனில் அழைத்து பேசினேன் அப்போது அவர், நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் எனக்கு நிறைய கமிட்மென்ட் உள்ளன என்று கூறினார்.
இதை தொடர்ந்து நான் அவரிடம் வீடாமல் பேசினேன் அதற்கு அவர் என்னிடம் நாளை டப்பிங் தியேட்டரில் இருப்பேன் வேடுமென்றால் என்னை அங்கே வந்து சந்தியுங்கள் நாம் பேசலாம் என்று கூறினார்.இதன்பின், யாருடன் வருவீர்கள் என்று கேட்டார் நான் என்னுடைய கார் ட்ரைவருடன் வருவேன் என்று கூறினேன்.
அதற்கு அவர் நீங்கள் தனியாக வாருங்கள் என்று சொன்னார். அவர் ஏன் அப்படி சொன்னார் எந்த கசப்பான விஷயத்தை மனதில் வைத்து கொண்டு சொன்னார் என்று எனக்கு புரிந்தது. அதற்கு பிறகு நான் நாளை பிசி என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டேன். மேலும், இஷா கோப்பிகர் அந்த நடிகரின் பெயரை கூறவில்லை. ஆனாலும் இவராக இருக்குமோ என்று சில நடிகர்களின் பெயரை கூறி யோசித்து வருகிறார்கள்.