அந்த நடிகரை நான் காதலிக்கவில்லை! ராகுல் ப்ரீத் சிங்

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரது சொந்த வாழ்க்கை பற்றிய செய்தி ஒன்று பரவியது. அவர் பாகுபலி நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் அதை மறுத்துள்ளார் அவர். “எங்கள் இருவரது வீடும் மிக அருகில் தான் உள்ளது. இரண்டு நிமிடத்தில் சென்றுவிடலாம். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராணாவை தெரியும். அப்போது அவர் காதலில் இருந்தார். நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். நான் சிங்கிள் தான். இதுவரை யாரையும் காதலித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை” என கூறியுள்ளார் ராகுல்.