கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடித்து வெளியான படம் மேயாத மான். இந்த படத்தில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியக தமிழ் சினிமாவில் அறிமுகமனார்.
மேலும், இந்த படத்தில் நடிகை இந்துஜா வைபவிற்கு தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை இந்துஜா போட்ட குத்தாட்டம் பட்டிதொட்டி எங்கும் செம கலக்கு கலக்கியது.
இந்தபடத்தை தொடர்ந்து, இந்துஜாவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. சமீபத்தில் இவர் நடித்து வெளியான சூப்பர் டூப்பர் என்ற படத்தில் மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்திருந்தார்.
இதற்கிடையில், இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர். ஆனால், ஆர்யாவுடன் இவர் நடித்த மஹா முனி திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிகில் படத்தில் இவரது காட்சிகள் பார்ப்பவர்களை அதிகளவில் ஈர்த்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில், மிகவும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு கீழ், என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று நடிகை மஹிமா நம்பியார் பதிவிட்டிருந்தார். அதற்கு இந்துஜாவும் வாங்க கல்யாண காதலை பண்ணுவோம் என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.