ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பக்கமூன பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு சென்ற ஆதரவாளர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸவின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் வீடு திரும்பிய ஆதவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். எலஹெர பிரதேச சபையின் தலைவர் உட்பட குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சட்டத்தரணி யஸ்ஸத டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.