பிக்பாஸ் வீட்டில் இருந்து சர்ச்சையான விதத்தில் வெளியேறியவர் நடிகை ஜாங்கிரி மதுமிதா. தற்கொலைக்கு முயன்று கையில் பெரிய காயத்துடன் அவர் வெளியேற்றப்பட்டார். அவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் டிவியில் காட்டப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மதுமிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் மற்ற போட்டியாளர்களை தாக்கி பேசியுள்ளார்.
தற்போது வரை கவின் உட்பட யாரும் தன்னை தொடர்பு கொண்டு பேசவே இல்லை என கூறியுள்ளார் அவர். மேலும் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் நடிகை சனம் ஷெட்டி (தர்ஷனின் காதலி) எனக்கு போன் செய்து பேசினார். “இவ்வளவு நடந்தும் தர்ஷன் முதலுதவி செய்ய கூட வரவில்லை என நீங்கள் சொல்வது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தர்ஷன் வெளியே வந்ததும் உங்களை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால் மனுஷனே இல்லை” என சனம் ஷெட்டி கூறினாராம்.