ஜனாதிபதி தேர்தல் தொகுதிகளில் ஒன்றுகூட சஜித்திற்கு கிடைக்காது!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவே வெற்றிப் பெறுவார் என்றும் சஜித் பிரேமதாசவிற்கு ஒரு ஆசனங்கள் கூட கிடைக்காது என்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வியத்மக காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாங்கள் முன்னெடுத்த முதற்கட்ட பரிசீலனைக்கமைய 22 தேர்தல் தொகுதிகளில் 16 தேர்தர்தல் தொகுதிகளில் கோத்தாபயவே வெற்றிப்பெறுவார் என்றும், அவ்வாறு அவர் வெற்றிப் பெரும் தேர்தல் தொகுதிகள் 13 இல் சஜித்துக்கு ஒரு ஆசனங்கள் கூட கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

160 ஆசனங்களில் 119 ஆசனங்களையும் கோத்தாபயவே பெறுவார் எனவும், இதன்போது 9 ஆசனங்களிலில் இருவருக்குமிடையில் கடுமையான போட்டிகள் நிலவும் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 90 ஆசனங்களையே அன்னம் சின்னம் பெற்றிருந்ததாகவூறிய அவர் இம்முறை கோத்தாபய வெற்றிப் பெறுவது உறுதி என்றும் நம்பிகை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரையிலும் இடம்பெறதாத வகையில் நாட்டின் அங்கவீனர்களை பிரதிநிதித்துவம்படுத்தும் மூன்று அமைப்புகளுடன் கோத்தபாய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருண்ய குணம் மிக்க கோத்தபாய அங்கவீனர்களுக்காக சிறந்த வேலைத்டதிட்டங்களையும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்ட டலஸ், . உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் மாத்திரமே இவ்வாறு அங்கவீனர்கள் தொடர்பில் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எமது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட கொள்கைத்திட்டங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளினூடாக இன்றிலிருந்து இணையத்தினூடாக பார்வையிட முடியும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்தார்.