சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அமலா பால். அதன் பின்னர் மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறினார்.
அதற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அமலா பால், கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அமலா பால் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடத்திற்குள் இவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் விவகாரத்து பெற்று, அதன் பின் இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், அமலா பாலுடன் நெருக்கமாக ஒரு நபர் புகைப்படம் எடுத்துள்ளார்.
மேலும், அந்த நபர் அமலா பாலின் பிறந்தநாள், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம், இமயமலைக்கு சென்ற புகைப்படம் உள்ளிட்ட அனைத்திலும் அமலா பாலுடன் போஸ் கொடுத்துள்ளார்.
எனவே, இவர் தான் அமலா பாலிம் காதலரா என அனைவரும் கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள்.