கமல்ஹாசனுக்காக ஒன்று சேரும் விஜய் மற்றும் அஜித்!

கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் திரையுலகில் 60 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்ததை பாராட்டும் விதமாக   நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா உட்பட திரையுலகை சேர்ந்த பல உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அந்த நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட  போஸ்டர்களில் ரஜினி, இளையராஜா ஆகியோருடன் விஜய் மற்றும் அஜித்தும் இடம்பெற்றுள்ளனர். இதனால் கமல்ஹாசனுக்காக, அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவர் என்ற செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.