தனியாக இருக்கும் காதலியை சந்திக்க வீட்டிற்கு சென்ற காதலன்..!! காத்திருந்த அதிர்ச்சி..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டின் மேல் பகுதியை பங்கஜ் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். வாடகைக்கு இருந்த பங்கஜ் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் இன்டர்நெட் சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இதனால், முன்னாவிற்கும், பங்கஜிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் வீட்டை காலி செய்யுமாறு முன்னா கூறியுள்ளார். எனவே வீட்டை விட்டு காலி செய்து வேறு பகுதிக்கு குடியேறியுள்ளார். இந்நிலையில் வீட்டில் வசித்த பொழுது பங்கஜிக்கும் முன்னவின் மகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தெரிந்து கொண்ட முன்னா எப்படியாவது பங்கஜ்ஜை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்து மகளின் மனதை மாற்றியுள்ளார். எனவே வீட்டில் தனியாக இருக்கிறேன் என்று கூறி வீட்டிற்கு பங்கஜ்ஜை வர வைக்குமாறு தனது மகளிடம் கூற அவரும் அதையே செய்துள்ளார்.

காதலியின் பேச்சை நம்பி உல்லாசமாக இருக்கலாம் என்று வீட்டிற்கு வந்துள்ளார் பங்கஜ் அப்பொழுது முன்னாவின் குடும்பத்தினர் பங்கஜ்ஜை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டனர். காவல்துறை விசாரணையில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.