பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது.
படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற, படம் திரையிட்ட இடங்கள் அனைத்திலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.
இந்நிலையில் பிகில் படத்தை மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் வியாபாரம் செய்தனர், இதில் போட்ட பணம் வந்ததா? என்று திருப்பூர் சுப்ரமணியத்திடம் பிரபல வார இதழ் கேட்டுள்ளது.
அதற்கு அவர் ‘பிகில் நல்ல கலேக்ஷன் தான், ஆனால் பெரிய தொகைக்கு வாங்கியதால், போட்ட பணம் மட்டுமே கைக்கு கிடைக்கும் நிலை.
ஆனால், கைதி மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது, போட்ட பணத்தை எடுப்பதற்கு எதற்கு தொழில் செய்ய வேண்டும், லாபம் வந்தால் தானே தொடர்ந்து தொழில் செய்ய முடியும்?’ என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.