படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுர விநியோக விழிப்புணர்வு நிகழ்வு இன்று மாலை மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் பஸார் பகுதியில் மக்கள் மத்தியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 2 ஆம் திகதி, அனுஸ்டிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவு கூரும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து இன்று புதன் கிழமை மலை 3.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இடம்பெற்றது.
கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களே இவ்வாறு மன்னாரில் பொது மக்களிடம் கையளித்தனர்.
யாழ் ஊடக அமையத்தின் ஏற்பட்டில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் வடக்கு ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.