ஒரு கலைஞன், பாத்திரமாகவே மாறிப்போனால் அவன் முன்னால் மூத்தவர், இளையவர் என எந்த தடையுமே நிற்காது என்பதற்கு உதாரணம் நடிகர் கமல்ஹாசன்.
இன்று அவர் 64ஆவது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்.
அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சாண்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ப்ரைஸ்சாக கமலுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
வாழ்க்கை முழுவதும் சுமந்து செல்ல அழகிய தங்கமான நினைவுகளை கொடுத்த உங்களுக்கு நன்றி என்றும் இனிய பிறந்த நாள் வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.