தேவையான பொருட்கள்:
ரவைகால் – கப்
பச்சரிசி – 2 கப்
ஜவ்வரிசிஅரை – கப்
பச்சை மிளகாய் – 4
புளித்த தயிர் – 1 கப்
பெருங்காயம் – 1 சிட்டிகை
எள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி சற்று ஈரத்துடன் இருக்கும் போதே மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டும்.
இந்த மாவை வெறும் கடாயில் குறைந்த தீயில் வறுக்க வேண்டும். மாவை இறக்கி ஆற விட்டு நன்கு சலிக்க வேண்டும்.
ஜவ்வரிசி, ரவையுடன் தயிர் சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்க வேண்டும். பின்பு சலித்த மாவுடன் அரைத்த மாவை சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பெருங்காயம், பச்சை மிளகாய் விழுது, உப்பு, எள் (விருப்பப்பட்டால் நெய் சேர்க்கலாம்) ஆகியவற்றை அதோடு சேர்த்துப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்.