தேவையான பொருட்கள் :
பொட்டுக்கடலை – ஒரு கப்
பூண்டு பல் – 3 (தோலுடன்)
மிளகாய்த் தூள் – கால் டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – கால் டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
பொட்டுக்கடலையுடன் பூண்டினைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய சுவையான பொட்டுக்கடலை இட்லி பொடி ரெடி.
இதனை நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.