இன்றைய ராசிபலன் (08.11.2019)

விகாரி ஆண்டு – ஐப்பசி 22 – வெள்ளிக்கிழமை (08.11.2019)
நட்சத்திரம் : பூரட்டாதி பகல் 2.01 வரை பின்னர் உத்திரட்டாதி
திதி : ஏகாதசி பகல் 1.38 வரை பின்னர் துவாதசி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45

வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை
சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். திருமண காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். வாழ்க்கைத்துணை வழியில் பணம், பொருள் சேரும். வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய கடனை அடைக்க புது வழி கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கடக ராசி
கடக ராசி அன்பர்களே, விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களே, வாக்கு வன்மை கூடும். எதிர்பார்த்த காரியம் கால தாமதமின்றி நடக்கும். தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உடன்பிறப்புகளுக்கு உதவ முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.

மகர ராசி
மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். காரியம் அனுகூலம் உண்டாகும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களே, பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் எந்தவித தடைகளின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.

மீன ராசி
மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தை தொடங்கும். உறவினர்கள், நண்பர்களுடன் சுமூக உறவு ஏற்படும். பண வரவு கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.