பிரித்தானியாவில் ஒரு இடத்தில் கத்து குத்து சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு இடத்தில் இது போன்ற சம்பவம் நடந்ததால், இளைஞன் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் Feltham பகுதியில் இருக்கும் பரபரப்பு மிகுந்த சாலையில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு மேல் இளைஞனை மர்மநபர் கத்தியால் குத்தியதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அழைத்து செல்லப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பரிதாபமாக இறந்தார். இறந்த இளைஞனுக்கு வயது 18 இருக்கும் எனவும், அவரின் மார்பில் கத்தியோ அல்லது பிளேடால் தாக்கியுள்ளதால், அதிக அளவில் இரத்தம் வெளியேறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலிலே சுமார் 9 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் Uxbridge பகுதியிலும் இது போன்ற கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. இதில் குறித்த இளைஞனின் காலை மர்ம நபர் வெட்டியுள்ளான்.
இதனால் நடந்த நபர் சிறிய அளவிலான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். Feltham பகுதியில் நடந்த சம்பவத்தில் 17 வயது மதிக்கத்தக்க இளைஞனை பொலிஸார் கைது செய்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் லண்டனில் கடந்த சில வாரங்களாகவே கத்தி குத்து சம்பவம் அதிகரித்து வருவதால், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். உயிரிழந்த நபர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை, விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.