ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதை நானே தடுத்து நிறுத்தினேன்.இதன் காரணமாகவே இன்று கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றார்” என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளதாக” மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “இந்நிலையில், கோத்தபாய ராஜபக்சவை காப்பாறியது யார் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். 2015ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் ஊடக சுதந்திரம் பேணப்பட்டுள்ளது.அத்துடன், தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள மக்களுக்கு தகவல் அறியும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.