உலகில் உள்ள மற்ற நாட்டு ஆடவர்களுக்கு மீசை எவ்வளவு முக்கியமோ, இல்லையோ! ஆனால், நமது இந்தியாவில் மீசை என்பது ஆண்களின் வீரத்தின் அடையாளம் அதிலும் தென்னிந்திய ஆண்களும், சீக்கியர்களும் மீசையை தனது குழந்தையை போல பாதுகாப்பவர்கள். இந்த மாடர்ன் உலகில் இன்னுமா மீசை வளர்கின்றனர் என யாருடைய குரலாவது உங்கள் அருகில் ஒலித்தால், “அவிங்கள கொஞ்சம் இங்காந்து பாக்க சொல்லுப்பு” என்று தென் தமிழகமே கொந்தளிக்கும்!!! இப்படி வீரத்தின் அடையாளமாக திகழும் மீசையைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
நிறம் மாறுபடும் சாதாரணமாக உங்கள் தலைமுடியின் நிறமும், முகத்தில் வளரும் முடியின் நிறமும் வேறுப்படும். உங்கள் மன அழுத்தம் மற்றும் விட்டமின் டி பற்றாக்குறையின் காரணமாக இந்த நிற வேறுபாடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
வளர்ச்சி சாதாரணமாக ஒரு நாளுக்கு 0.4 மிமீ அளவு உங்கள் மீசை, தாடி வளர்கிறது.கைக்குட்டை வாகனத்தில் அல்லது வெளியில் செல்லும் போது, முகத்தில் கைக்குட்டை கட்டிக்கொள்வது உங்கள் மீசை, தாடியை பாதுகாக்கும். மாசுபடும் போது உங்கள் மீசை, தாடியில் வறட்சி ஏற்பட்டு முடி உடைத்தல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
சராசரியாக… சராசரியாக ஒரு நாளுக்கு ஆண்கள் அவர்களது மீசை தாடியை 760 முறைக்கு மேல் தொட்டுப் பார்த்து ரசிக்கின்றனர்.அழகு ஆண்களின் அழகை அதிகரிக்கிறதாம். முக்கியமாக பெண்கள் தாடி மீசை வைத்திருக்கும் ஆண்களை விரும்புகின்றனராம்.
ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உங்கள் மீசை, தாடியை நன்கு வளர உதவுகிறது.வெள்ளை நிறம் தலை முடியை விட வேகமாக மீசை தாடி நரைத்து விடும்
சிறந்த கருவி கத்திரிக்கோல், ரேஸர் இவை இரண்டும் தான் காலம் காலமாக மீசை, தாடி திருத்தத்திற்கு மாற்று இல்லாமல் உதவும் சிறந்த கருவியாக பயன்பட்டு வருகிறது.