மரணத்தில் இருந்து காக்கும் தேங்காய் பூ!

கோவிலில்
தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை
நல்ல சகுனமாக நாம் கருதுவுதுண்டு. அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ என்பது முற்றிய
தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

இந்த
தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி எப்படி செய்யப்படுகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ.

நாம்
பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு. அது பற்றி மிக விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நன்மைகள்
தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதில் உள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. அப்படி என்னென்ன நோய்களுக்கு இது பயன்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

நோய் எதிர்க்கும் சக்தி
இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களினால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்க்ளைத் தவிர்க்க முடியும்.

மன அழுத்தம் குறைப்பு
அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்பாழுது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத எனர்ஜி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.

ஜீரணத்தை
அதிகமாக்க
அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய் பூ இருக்கும். இந்த
தேங்காய் பூவில் உள்ள மினரல்களும் வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது

நீரிழிவு
இந்த தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்ற அபார சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி இந்த தேங்காய் பூவை சாப்பிடுவதனால் உங்களுடைய ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் இந்த தேங்காய் பூ பயன்படுகிறது.

இதய நோய்கள்
இதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்சினையை சரிசெய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய் பூ செயல்படும்.

தைராய்டு
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் என்னதான் அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், தைராய்டு சுரப்பியின் மூலம் வேறு சில பக்க விளைவுகளையும், குறிப்பாக உடல் பருமன் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா எவ்வளவு ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும்.

சர்க்கரை வியாதிக்கு
தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

புற்றுநோய்
புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை இந்த தேங்காய் பூ கொண்டிருக்கிறது. இது நமக்கு புற்றுநோய் உண்டாகாமல் காக்கிறது.

உடல் எடை
உங்களுடைய உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த தேங்காய் பூ உதவுகிறது. இதில் உள்ள கலோரியின் அளவும் மிக மிகக் குறைவே. இதனால் எடையும் கூடாது. நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுபு்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாகக் குறைக்க உதவுகிறது.

சிறுநீரகம்
தேங்காய் பூ கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. தொற்றுநோய்களைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் உருவாகிற நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் இந்த தேங்காய் பூவுக்கு உண்டு.

இளமைப் பொலிவு
நம்முடைய சருமத்தை மிக இளமையாகவும் பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்கு இந்த தேங்காய் பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உங்களுடைய இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.