ரசிகர்கள் மத்தியில் பரவலாக கவர்ந்து வரும் நடிகைகளில் நடிக்க துவங்கிய 2 வருடங்களிலேயே பல லட்சம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இளம் நடிகை ‘ரஷ்மிகா மடோனா’. இவர் ‘கிர்க் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் கன்னடம் திரை உலகிற்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கில் வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் இவர்க்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
தற்போது கார்த்தியின் நடிப்பில் உருவாகும் ‘சுல்தான்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிலும் அறிமுகமாக உள்ளார் ரஷ்மிக. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ரஷ்மிகவின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இணைதளங்களில் கூட பெரிதளவில் இந்த புகைப்படம் இவரது ரசிகர்களால் வைரலானது.
ஆனால், ரஷ்மிக்காவை பிடிக்காத யாரோ சிலர் அந்த சிறு வயது புகைப்படத்தை வைத்து மோசமான முறையில் சித்தரித்து மீம் ஒன்று போட்டுள்ளனர். அது என்னவென்றால் ‘இந்த புகைப்படத்தில் உள்ள பெண்ணை யாருக்கு தெரியும், இவள் தான் வருங்காலத்தில் இன்டர்நேஷனல் விபச்சாரி’ என்று ரஷ்மிகாவை முகம் சுளிக்கும் அளவிற்கு மோசமாக சித்தரித்து இருந்தனர்.
இந்நிலையில் அந்த மீமிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “இப்படி செய்தால் உங்களுக்கு அப்படி என்னதான் கிடைக்கும். நான் நடிக்கும் படங்களை என்னவேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள் அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், தனி ஒரு நபரின் வாழ்க்கையை பற்றி கேவலமாக பேசாதீர்கள் அதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது. பிரபலங்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பண்ணுவீர்களா” என்று மன கோபத்துடன் தனது இணையதள ஸ்டேட்டஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்த செய்தி தான் ரசிகர்களால் இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.