திரைத்துறையில் தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழில் பிரபல நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சிம்பு, சூர்யா, மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். அனுஷ்கா ஷெட்டி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அனுஷ்கா ‘பாகுபலி’ படத்தின் மூலம் தனது ரசிகர்கள் வட்டத்தை மேலும் பெரிதாக்கி கொண்டார். இவர் தற்போது, மாதவனுடன் `நிசப்தம்‘ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். `இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக பல மடங்கு தனது எடையைக் கூட்டி நடித்திருந்தார்.
அந்த படத்தில் நடித்துமுடித்த பின்னர், எடையை குறைக்க அவர் நிறையவே கஷ்டப்பட்டார். அந்த சமயத்தில், தான் மேற்கொண்ட பயிற்சிகளையும் முயற்சிகளையும் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டிருந்தார்.
அனுஷ்கா சமீப காலமாக திரைப்படங்களில் அதிகளவில் நடிக்கவில்லை. கடைசியாக பாகமதி என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், அனுஷ்கா மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.